Tuesday, October 18, 2022

புதுமுகங்கள்

 அண்மையில் பல விடபபட்ட நபர்களில் நட்பு கிடைக்கின்றது.

முகநூலில் பலருடைய நட்பு நம்ம தேடி வருகின்றது.

இந்த ஆட்களில் பலரும் முகம் தெரியாதவர்கள் முன்பின் அறியாதவர்கள்.

ஆனால் எப்படி அவர்களுக்கு நட்பு தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் காலை வணக்கம் என்றும் இரவு வணக்கம் என்றும் சொல்ல முடிகிறது அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்று எல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்..

காணுகின்ற ஒவ்வொரு ஆட்களுக்குள்ளும் பலவித அனுபவங்கள் ஒழிந்து, ஒளிந்தே கிடக்கின்றன. 

சிலரைப் போல நானும் சகஜமாக பழக  நினைக்கின்றேன் ஆனால் இயலவில்லை.

ஒருவேளை மரியாதை இல்லாமல் அழைத்து விடுவோமோ என்கிற பயம்.

அல்லது அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தார்கள் என்று தெரியாமல் அவர்களை தொந்தரவு செய்வோமோ என்கிற கலக்கம்.



Friday, September 23, 2022

இணை நண்பர்கள்

கிருஷ்ணா - முருகன் இருவரும் இணைபிரியாத நண்பர்கள்.

பள்ளிக்கு வந்த உடனே ஒருவரை ஒருவர் தேடி கொண்டு, பார்க்கின்ற வரையில் அவர்களுக்கு நிம்மதி இல்லாமல் இருக்கின்ற ஒரு நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது..

வழக்கம்போல சாப்பாடு நேரத்தில் முருகன் மட்டும் சத்துணவை தேடிப் போவான். கிருஷ்ணா தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த தயிர் சாதம் ஊறுகாய் சில நேரங்களில் சாம்பார் சாதம் என்று தினமும் வகை வகையாக சாப்பிடக் கூடியவன்.

முருகன் கிருஷ்ணாவின் வீட்டுக்கு போவான். கூச்சத்தோடு இருந்துவிட்டு திரும்பி விடுவான்.


நாள் அடைவில் இது தொடர தொடர உயிர் நண்பர்களாகி விட்டனர்.

இருந்தாலும் முருகனின் மனதில் பல குறைகள் இருந்தன தன்னுடைய ஏழ்மை, இயலாமை மற்றும் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளை பார்க்கின்றான் மனதின் ஓரத்தில் குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கிருஷ்ணாவும் இதை கவனிக்காமல் இல்லை.

முருகனுக்கு தன் மேல் அடிக்கும் மீன் வாடை, கிழியாத துணிகள் இல்லாததால் வருகின்ற கூச்சம் எல்லாம் அடிக்கடி வந்து போகும் இருந்தாலும் அப்படியே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

கிருஷ்ணாவுக்கு முருகனை மிகவும் பிடிக்கும் ஏனென்றால் தன்னுடைய வீட்டிலே பெற்றோர்கள் அவ்வளவாக படிக்காதவர்களாக இருந்தாலும் இவன் திறமையாக புத்திசாலியாக இருப்பதை கண்டு கிருஷ்ணா பெருமிதம் கொள்வான்.

எப்பொழுதும் வகுப்பில் முதல் அல்லது இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டு இருந்தவனுக்கு பல நண்பர்கள் இருந்திருக்கவே செய்தனர்.

போராட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஆட் படுகின்ற இவர்கள் பல்வேறு காரணங்களால் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கின்றனர்..

(தொடரும்....)